கீழ‌க்க‌ரையில் "அன்பின் முக‌வ‌ரி அப்துர் ர‌ஹ்மான்" நூல் வெளியீட்டு விழா ம‌ற்றும் தாசிம் பீவி க‌ல்லூரியின் 25ம் ஆண்டு வெள்ளி விழா!

04/04/2013 13:27

கீழ‌க்க‌ரை தாசிம் பீவி அப்துல் காத‌ர் ம‌க‌ளிர் க‌ல்லூரி 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா ம‌ற்றும் ""அன்பின் முக‌வ‌ரி அப்துர் ர‌ஹ்மான்"" என்ற‌ நூல் வெளியீட்டு விழா க‌ல்லூரி வ‌ளாக‌த்தில் நடைபெற்ற‌து.

க‌ல்லூரி தாளாள‌ர் ர‌ஹ்ம‌த்நிஷா அப்துர்ர‌ஹ்மான் த‌லைமை வ‌கித்தார்.சென்னை அமெரிக்கா தூத‌ர‌க‌ அதிகாரி ஜெனிப‌ர் மெக் இண்டைய‌ர் ,நியூ டெல்லி பெண்க‌ள் க‌ல்விக்குழு த‌லைவ‌ர் ச‌பிஸ்தான் க‌ஃபார்,சென்னை உய‌ர்நீதிம‌ன்ற‌ம் ம‌துரை கிளை நீதிய‌ர‌ச‌ர் நீதிப‌தி அக்ப‌ர் அலி,ஹாங்காங் த‌மிழ் ப‌ண்பாட்டு க‌ழ‌க‌ உத‌வி த‌லைவ‌ர் ஜமால் முன்னிலை வ‌கித்தன‌ர்.க‌ல்லூரி முத‌ல்வ‌ர் சுமையா தாவூது ஆண்ட‌றிக்கையை ச‌ம‌ர்பித்தார்.மாண‌வி த‌ஸ்லீம் முப்திஃகா

க‌ல்வியில் சிற‌ப்பாக‌ செய‌ல்ப‌ட்ட‌த‌ற்கு மாண‌வி த‌ன‌து த‌ந்தை ப‌க்கீர் முகைதீன் ம‌ற்றும் தாயாரோடு நிக‌ழ்ச்சியில் ப‌ங்கேற்று ப‌ரிசு பெற்றார்

2013 ஆம் ஆண்டின் 'சிறந்த மாணவி'க்கான விருதும், தங்கப பதக்க‌மும் மாண‌வி 'ஃபஹ்ஜத் குபுராக்கு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து மாண‌வி க‌ணவ‌ர் கீழை இளைய‌வ‌ன் என்ற‌ சாலிஹ் ஹிசைனுட‌ன் நிக‌ழ்ச்சியில் க‌லந்து கொண்டு ப‌ரிசை பெற்று கொண்டார்

சென்ற‌ ஆண்டு க‌ல்லூரி ப‌டிப்பை நிறைவு செய்த‌ ம‌ற்றும் ந‌ட‌ப்பாண்டில் ப‌யின்று வ‌ரும் மாண‌விக‌ளில் சிற‌ப்பாக‌ செய‌ல்ப‌ட்ட‌வ‌ர்க‌ளுக்கு விருதுக‌ள் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.
மேலும் க‌ல்லூரியின் நிறுவ‌ன‌ர் பி எஸ் ஏ அப்துர் ர‌ஹ்மான் அவ‌ர்க‌ளின் பெய‌ரில் " அன்பின் முக‌வ‌ரி அப்துர் ர‌ஹ்மான்" என்ற‌ நூலை சென்னை உய‌ர்நீதிம‌ன்ற‌ம் ம‌துரை கிளை நீதிய‌ர‌ச‌ர் நீதிப‌தி அக்ப‌ர் அலி, அக்ப‌ர் அலி வெளியிட‌ சீத‌க்காதி அற‌க்க‌ட்ட‌ளை உறுப்பின‌ர் பிஎஸ்ஏ அவ‌ர்க‌ளின் மூத்த‌ ம‌க‌ள் குர்ர‌த் ஜ‌மிலா பெற்றுக்கொண்டார்.

இந்நிக‌ழ்ச்சியில் டாக்டர் செய்ய‌து அப்துல் காத‌ர் ,சீத‌க்காதி அற‌க்க‌ட்ட‌ளை கீழ‌க்க‌ரை துணை பொது மேலாள‌ர் சேக் தாவுது,மாவ‌ட்ட‌ காங்கிர‌ஸ் த‌லைவ‌ர் ர‌விச‌ந்திர‌ ராம‌வ‌ன்னி ம‌ற்றும் முக்கிய‌  பிர‌முக‌ர்க‌ள் உள்ளிட்ட‌ ஏராள‌மானோர் க‌ல்ந்து கொண்ட‌ன‌ர்.