கீழ‌க்க‌ரையில் மாயமான‌ சிறுவ‌ர்க‌ளை பெற்றோரிட‌ம் ஒப்ப‌டைத்த‌ போலீசார்!

04/03/2013 20:28

கீழக்கரை புதுக்குடி  நெய்னா கருணை, . அதேபகுதியை சேர்ந்த  முபாரக் அலி, 11. வடக்குத்தெரு அன்வர் ஆகிய மூன்று பேரும் நண்பர்கள். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற இவர்கள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் வீடுகள், அக்கம்பக்கத்தில் தேடியும் காணவில்லை.

இதனால், சந்தேகமடைந்த நெய்னா கருணையின் தாயார், கீழக்கரை மகளிர் போலீசில் புகார் செய்தார்.

 இதற்கிடையில், ராமநாதபுரம்- சென்னை ரயிலில் மூன்று சிறுவர்கள் செல்வதாக மகளிர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, எஸ்.ஐ., ஹெலன் ராணி ஆகியோர் காரைக்குடி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இப்போலீசாரின் உதவியோடு, மீட்கப்பட்ட மூன்று சிறுவர்கள் சம்பந்தப்பட்ட பெற்றோரிடம் கீழக்கரை மகளிர் போலீசார் ஒப்படைத்தனர்.